Monday, June 7, 2010

இறையாட்சி என்பது...

இறையாட்சி என்பது என்ன என்று, தானாக எழுதுவதை விட படித்தவைகள், போதிக்கப்பட்டவைகள், அனுபவங்களில் இருந்து எழுவதே சரியாக இருக்கும். 20 வருடங்களுக்கு மேல் ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த அனுபவங்களின் ஒரு தொகுப்பு தான் இந்த கட்டுரை. அதற்க்காக எல்லாருக்கும் தெரிந்த விசயங்களை மட்டும் எழுத வில்லை.

2000 மாவது வருடத்தை திருச்சபை நற்கருணை ஆண்டாக அறிவித்தது. இந்த சிறப்பை முன்னிட்டு கோட்டாறு மறை மாவட்டம் பலவருடங்களாக வகுப்பு நடத்திக்கொண்டிருந்த 9 வகுப்பிற்கு மட்டும் அந்த வருடத்திலிருந்து நற்கருனையின்  
 சிறப்பாக புதிய புத்தகத்தை  அறிமுகப்படுத்தியது. இது நற்கருணையின் சிறப்பையும் அதன் உண்மையான அர்த்தம் என்ன என்ன்பதையும்  விளக்குவதாகவும் அமைந்தது.

இறையாட்சி என்பது விண்ணில் மட்டும் இருக்கவேண்டிய வாழ்க்கையல்ல. மண்ணில் நாம் வாழ்ந்து காட்டவேண்டியதும்  கூட, மண்ணுலகமும் படைக்கும் போதே இறையாட்சியின் நோக்கமாகவே படைக்கப்பட்டது. ஆனால் அலகையின் துணைகொண்டு, முதல் மனிதன் முதல் ஒவ்வொரு மனிதனும் அதை மீறுவதே நோக்கமாக கொண்டு செயல் பட்டு வருகிறான், வருகிறோம்.

இறையாட்சி என்றால் எப்படி?
இந்த உலகத்தை போல அல்லாமல், அங்கு இறைவனின் விருப்பம் படியே அனைத்தும் இருக்கும். இறையாட்சியில் சந்தோசம் இருக்கும், துக்கம் இருக்காது, கவலை இருக்காது, அழுகை இருக்காது. சமத்துவம் இருக்கும், ஏற்றத்தாழ்வு இருக்காது, பாகுபாடு இருக்காது, மொத்தத்தில் பாசிட்டிவான நிகழ்வுகள் மட்டுமே இருக்கும், இயேசுவின் போதனைகள் அனைத்துமே இறையாட்சிக்கானது. இயேசுவின் பல உவமைகளும், போதனைகளும்  இறையாட்சியின் முக்கியத்துவத்தையே உணர்த்துகின்றன, இதற்காகவே அவர் வாழ்ந்தார், உயிரை கொடுத்தார் நற்கருணையை ஏற்படுத்தினார்

திருப்பலியை நாம் மீண்டும் மீண்டும் நிறைவேற்றி வருகின்றோம்,அதாவது இயேசு செய்த உடன்படிக்கையை புதுபித்துக்கொண்டு வருகிறோம், தனது உடலையும் இரத்த்ததையும் கொடுத்த அந்த விருந்தில் பங்கு கொள்கிறோம் இது தான் நற்கருணை

நற்கருணை விருந்தில் பங்கு கொள்பது என்பது இயேசுவின் கொள்கைகளில் உடன்பாடு கொண்டவர்கள் மட்டுமே பங்கு பெறுவது, அதாவது அவரது போதனையை ஏற்று கொள்வது, அவர் விரும்பிய ஆட்சியை நிலை நிறுத்த உறுதி ஏற்பது என்பதே உடன்பாடு. இயேசுவின் காலத்திற்கு பின் ஆதி கால கிறிஸ்த்தவர்கள் இந்த உடன்பாட்டின் படியே வாழ்ந்து வந்தார்கள், அவர்கள் ஒரு  இடத்தில்  கூடுவார்கள், தங்களிடம் இருப்பதை பங்கிட்டு கொள்வார்கள், ஒருவருக்கொருவர் அன்புடனும் தோழமையுடனும் பழகி வந்தார்கள், ஆனால் காலப்போக்கில் மக்களின் வசதிக்கேற்ப பெரிய வசதியான ஆலயம் எழுப்பப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன.. பக்கத்தில் இருப்பவர்கள் யார் என்று கூட  தெரியாமல் நாம் நம் திருப்பலி கடமையை ஆற்றி வருகிறோம்..

பல நூற்றண்டுகளுக்கு முன்னால் திருச்சபையில் மிகப்பெரிய விவாதம் நடை பெற்றது. அது நற்கருணையில் உண்மையிலே இயேசு இருகிராறாரா? அல்லது அது ஒரு அடையாள பிரசன்னமா என்று? அப்போது நற்கருணையில் இயேசு இருப்பது என்பது ஒரு அடையாளப் பிரசன்னம்  என்று வாதிட்டவர்கள் தண்டிக்கப்பட்டனர், திருச்சபையில் இருந்து நீக்கவும் செய்தனர். மக்கள் அந்த தரிசனத்திற்காக 20 வருடங்களுக்கு முன், ஒரு கோவிலில் திருப்பலி முடிந்த பின் அடுத்த கோவில் என்று நடையாக நடந்து பங்கு பெற்றனர். இவைகளால் நற்கருணை அழகிய பேழைகளில் வைக்கப்பட்டன, தரிசனம் வேண்டி மக்கள் வழிபட சகொதர உறவுகள், தோழமைகள் பின் தள்ளப்பட்டன.. இந்நிலையில் முக்கியமான எழுந்தேர்ரம் முடிந்த பின்னர் "இது விசுவாசத்தின் மறைபொருள்" என்ற வார்த்தை ஒரு திருத்தந்தையால் புகுத்தப்பட்டது.. மக்களை  மேலும்  இரகசியத்தை தேடும் அளவுக்கு ஆக்கியது.. ஆனால் ஆதிகால திருப்பலியும்    அதன் நோக்கமும் முற்றிலும் மாற்றப்பட்டுவிட்டது

இப்போது உள்ள முறைகள் எல்லாம் காலத்திற் கேற்றபடி மாற்றப்பட்டவை, ஆதி கிறிஸ்த்தவர்களை போல தங்களிடம் உள்ளவற்றை பங்கிடுவது என்பது இந்த காலத்தில் யாருக்கும் இயலாத ஒன்று, அன்பியங்கள் ஓரளவுக்கு ஆதி கிறிஸ்த்தவர்களின் வாழ்கையை  எடுத்துகாடுகிறது, மற்றபடி இறையரசை பலப்படுத்த கையளிப்பது... Not completed..                     

Thursday, October 29, 2009

நீதி மன்றங்கள் - ஆய்வுக்கு

"ஒரு தனி மனிதனின் விருப்ப வெறுப்புகளை ஓட்டு மொத்த தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?"

ஒரு நீதிபதி சொன்ன தீர்ப்பை இன்னொரு நீதிபதி நேர் மாறாக வழங்கும் பொது, இருவரில் ஒருவர் தவறு செய்தவர் ஆகிறார். அவருக்கு என்ன தண்டனை? இரண்டாவது வழங்கிய தீர்ப்பும் சரிதானா என்பதை பாதிக்கப்பட்டவர் எப்படி எடுத்துகொள்வார்?

Thursday, October 15, 2009

கூட்டு சேர்ந்து தொழில் செய்யாதீர்

கூட்டு சேர்ந்து தொழில் செய்யுங்கள் : சரியான ஒப்பந்தங்கள், விதிமுறைகளின் படி.அதாவது வியாபார நண்பர்கள் என்றால்   

செய்யாதீர்கள் : நண்பர்கள், நட்பு என்னும் பந்தத்தை நம்பி.

அதாவது முதல் முறை வியாபார ரீதியில் கூட்டு சேர்வது. ஒப்பந்தங்கள், பத்திரங்களில் கையெழுத்திட்டு செய்யப்படுவது. சினிமா விநியோகம் செய்வது, இரண்டுபேர் என்றால் ஆளுக்கொரு ஏரியாவை எடுத்துக்கொள்வது, பங்குபத்திரங்கள் வெளியீடு, இவைபோன்றவைகள் இந்த வகையில் சேரும். இவை வெற்றிபெறலாம்.

ஆனால் இரண்டாம் முறை என்பது மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும். உயிர் நண்பர்கள் என்ற நம்பிக்கையிலும், கற்பனைகளோடு ஆரம்பிக்கப்படுவது இந்த வகை.  இறுதியில் தொழில் லாபம் என்றாலும் சரி, நஷ்டம் என்றாலும் சரி, அவர்கள் நட்பு முறிந்து போயிருக்கும் அது எப்படி பட்ட லவ்லி பிரான்டசாக இருந்தாலும் தாக்குபிடிக்காது.   

நண்பர்கள் 4 பேர் என்றாலும், அறிமுகப்படுத்டுபவர் அல்லது ஐடியா கொடுப்பபவர்கள் ஒன்று அல்லது 2 பேராக இருப்பார். மற்றவர்கள் அவர்கள் திட்டங்களால் சேர்க்கப்பட்ட்வர்களாக அல்லது கவரப்பட்டு இணைந்திருப்பர். இதில் காரியமானவர்கள் பிரச்சினை வரும்போது களந்து விடுவர் மற்றவர்கள் தங்கள் நேரம் வேலை முழுவதும் கொடுத்து பெரிய நஸ்டங்களை  சுமக்க வேண்டிவரும் - காரணம் இங்கு எந்த ஒப்பந்தங்களும் விதி முறைகளும், கூடு சேர்ந்து செய்வதால் பங்கு ஆதாரங்களும் இருக்காது.

சிலர் கூட்டு சேரும் போதே அவர்கள் உள்ளத்தில் சாத்தான் இருப்பான் இடையில் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப வேறு வேலை தொழில் சேர சென்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் சேர்ந்திருப்பார், அனால் திட்டத்தை வெளியில் சொல்லமாட்டார்கள். லாபம் வந்தால் பெற்று கொள்ளலாம் என்று இணைந்திருப்பர். 

சிலர் இடையில் சென்றுவிடுவார்கள் அவர்கள் செய்து வந்த  வேலைக்காக இளைய சகோதரர்களை சேர்த்து விட்டு சென்றுவிடுவர். இது அரைகுறையாக செல்லும் முடிவில் நஸ்டம் என்றால் விலகிவிட்டேன் என்று கையை கழுவி விடுவார்கள். 

மக்களிடம் இருந்து பணம் பிரித்து சேமிப்பு, சீட்டு போன்ற திட்டங்கள் நடத்தும் பொது அந்த பணத்தை பெற்று சிலர் சொந்த தொழில் தொடங்க எடுத்து விடுவார் ஆதாவது லோன் எடுப்பது போல (?) அதுவும் தோல்வியடைந்தது விட்டால் அவரிடம் பணத்தை திரும்ப பெறுவதே மற்றவர்களுக்கு வேலையாகி விடும். ஆவர் தானாகவே விலகியவராய் விடுவார். ஆனால் அவரது செயலால் மக்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க கடும் நெருக்கடி வரும். கடன் வாங்கி அல்லது அடுத்த வருட அல்லது க்ரூப் மக்களிடம் இருந்து பணம் பெற்று முதல் குரூப் மக்களை சமாளிப்பார்கள். இதனால் பாரத்தை விடவும் முடியாமல் தொடர்ந்து பொய் கொண்டே இருக்கும்.   

மொத்தத்தில் பெரிய நஸ்டத்தையும் இழப்பையும் பெற்று மீதி இருக்கும் ஒன்று அல்லது இரண்டு பேரின் தலையில் விழுந்திருக்கும் இவர்கள் வாழ்க்கையில் பெரிய  அடி வாங்கியிருப்பர். இங்கு நட்பு தொடர்ந்திருக்குமா என்ற  கேள்விக்கே இடமிருக்காது   

நண்பர்களே செயாதீர்! கூட்டு சேர்ந்து தொழில் செய்யாதீர்!          

குறிப்பு : கூட்டாளிகளில்  சிலர் செய்யும் செயல்களால்  ஒப்பந்தங்கள்  

Wednesday, September 9, 2009

இன்ஜினியரிங் மேற்படிப்பு கவுன்சிலிங்கிலிருந்து சில தகவல்கள் :
அண்மையில் நடைபெற்ற இன்ஜினியரிங் மேற்படிப்பு கவுன்சிலிங்கில் இடவொதுக்கீடு மூலம் சிலருக்கு பயனிருந்தாலும் சிலருக்கு பாதகமாக இருந்தது. குறைவான மதிபெண்களுடன் பல B.C. வகுப்பினர் கூலாக எந்த வித பதட்டமும் இல்லாமல் சிறந்த கல்லூரிகளில் இடங்களை பெற, அவர்களுடன் ஒரே வகுப்பில் படித்து முதல் மதிப்பெண்கள் பெற்ற O.C. வகுப்பினர் சிலர் கூட விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தங்கள் சமூக விதியை எண்ணி வருந்தியபடி சென்றனர்.
இந்த கவுன்சிலிங்கில் கல்லூரி மதிப்பெண் பட்டியலை கணக்கில் கொள்ளாமல் நுழைவு தேர்வு ஒன்றை மட்டும் அடிப்படையாக கொண்டு எப்படி இடம் ஒதுக்கீடு செய்யலாம்? படித்து தேர்வு எழுதியவர்களுக்கும், படிக்காமல் சும்மா ஏதாவது ஒரு விடையை தேர்வு செய்து எழுதிய மாணவர்களுக்கும் மதிப்பெண் வித்தியாசங்கள் மிகப்பெரிய அளவில் இல்லாத பொது, கல்லூரி மதிப்பெண் பட்டியலை சேர்க்காமல் நுழைவு தேர்வு மதிப்பெண்கள் மூலமும் ஜாதி வாரியான இடவொதுக்கீடு மூலமும் கல்லூரிகளில் இடங்களை வழங்கியது நல்ல மதிப்பெண்கள் பெரும் மாணர்கள் தகுந்த வாய்ப்புகளை இழந்தனர்.
ஜாதிகளை ஒழிக்கவேண்டும் என்று கூறிகொண்டே இப்படி ஜாதிகள் மூலம் இடம் அழிப்பது சரியா? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியார் : "தனி ஒருவனுக்கு உணவில்லைஎன்றால் இந்த ஜெகத்தினை அழித்திட வேண்டும்" என்றார். இது எல்லோருக்கும் பொருந்தாதா? சில பிரிவினர் இன்ஜினியரிங் (B.E) சேரும் போதும் சலுகை பெற்று, மறுபடி இன்ஜினியரிங் மேற்படிப்பு (M.E) சேரும் போதும் வரிசையா சலுகைகளை அனுபவிப்பதும், மற்ற ஜாதியினர் வரசையாக இழப்புக்களை அனுபவிப்பதும் சரியாக இருக்குமா?
கல்லூரியில் முதல் நுழைவு வாயிலுக்கு மட்டும் [இன்ஜினியரிங் (B.E) சேரும் பொது] இந்த கூடுதல் வாய்ப்பை கொடுத்து, மற்ற எல்லா மேற்படி வாய்ப்புக்களையும் மெரிட் என்ற திறமைக்கு கொடுத்தால் கல்வியின் தரமும் உயரும். அனைவருக்கும் சம வாய்ப்புக்களும் கிடைக்கும். ஆனால் இங்கு அசட்டையாக வந்து இடாங்களை பெற்றுசெல்லும் வசதியை தான் அரசும், பலகலை கழகங்களும் செய்து கொடுத்திருக்கின்றன.

பழங்குடியினர், காணி இனம் போன்ற சில மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கும், பொருளாதார நிலையில் கீழ் நிலையில் இருப்பவர்களுக்கும் ஒதுக்கீடுகள் கொடுக்கலாம் தவறில்லை. ஆனால் பின்தங்கிய வகுப்பு, மிகவும் பின்தங்கிய வகுப்பு என்று கூறப்படும் சில வகுப்புக்களில் வசதி இருப்பவர்கள் மட்டுமே மேற்படிப்பிற்காக வருவார்கள். இவர்கள் தான் பதட்டமில்லாமல் இடங்களை பெற்று செல்லும் நிலை காணப்படுகிறது.

வருடா வருடம், தேவைக்கேற்ப கல்லூரிகளில் மொத்த இடங்கை அதிகரிப்பது அல்லது இட ஒதுக்கீடு சத வீதங்களை நிலைக்கேற்ப மாறுதல் செய்து கொண்டே இருப்பது தான் சிறந்த தீர்வாக இருக்கும்.
DYNAMIC ALTERATION NEEDED FOR EVERY YEAR

Saturday, September 5, 2009

Jesus the Bread of Life

I am the living bread that came down from heaven. If you eat this bread, you will live forever.

The bread that I will give you is my flesh. For my flesh is the real food; my blood is the real drink. Those who eat my flesh will never be hungry and who drink my blood will never be thirsty.

Do not work for food that spoils [goes bad]; instead, work for the food that lasts for eternal life.